செய்திகள் இந்தியா
அருணாசல பிரதேச மாநில எல்லையையொட்டி படைகளைக் குவித்து வரும் சீனா
மணிப்பூர்:
இந்தியாவின் அருணாசல பிரதேச மாநில எல்லையையொட்டி சீனா தனது படைகளைக் குவித்து வருகிறது. இது குறித்து சீனா பதிலளிக்க மறுத்துவிட்டது.
சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவரிடம், அருணாசல பிரதேசத்தின் சுபான்ஸ்ரீ பிராந்தியத்தில் சீன படைகள் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும், அருணாசல பிரதேசத்தையொட்டிய எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினா் இடையே நடைபெற்ற கைகலப்பை தொடா்ந்து, எல்லையில் இரு நாடுகளும் 4 ஆண்டுகளுக்கு படைகளைக் குவித்து வைத்திருந்தன. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது தேப்சாங் உள்ளிட்ட 2 பகுதிகளில் குவிக்கப்பட்ட படைகளைத் திரும்பப் பெறுவது என முடிவு செய்தன.
தற்போது மீண்டும் சீனா படைகளை குவித்து வருகிறது. இந்தியா இதற்கு எத்தகைய எதிர்வினை ஆற்றப்போகிறது என்று தெரியவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
