செய்திகள் இந்தியா
இன்ஸ்டாகிராம் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணம்
பாட்னா:
தனது பெற்றோர், வேறொருவருடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், 19 வயது பெண், தன்னுடைய இன்ஸ்டாகிராம் காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரே மணி நேரத்தில் புர்னியா சந்திப்பு ரயில் நிலையம் அருகே அப்பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் காதலனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் நட்பாகி, காதலித்து அவருடன் ஓடிய இளம்பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்லூரியில் படித்து வந்த மணீஷா குமாரி என்ற மாணவி, காதலனை திருமணம் செய்துகொண்டு காளி கோயிலுக்குச் சென்று திரும்பிய நிலையில் ஒரு மணி நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார். அவரை திருமணம் செய்த காதலன் தில்குஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி திங்கள்கிழமை காலை தில்குஷ், மணீஷாவை அராரியாவிலிருந்து அழைத்துக் கொண்டு 2 மணிக்கு புர்னியா சென்றுள்ளார். ரயில் நிலையத்தில் அவரது நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்றுக் கொண்டார். ரயில் நிலையத்திலேயே அவர்கள் தங்கியிருக்கிறார்கள். தங்களது திருமண புகைப்படத்தையும் தில்குஷ் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையே காளி கோயிலுக்கு இருவதும் சென்றிருந்த போது, திடீரென மணீஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியிருக்கிறார். அன்றைய தினம் கடுமையான வெய்யில் இருந்ததால், தண்ணீர் சத்து குறைந்து அவர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இருவர் குடும்பமும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடல் கூராய்வுக்குப் பிறகே உண்மை தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
