செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா சூப்பர் கிண்ணம் பிஎஸ்ஜி அணி சாம்பியன்
ஆஸ்திரியா:
ஐரோப்பா சூப்பர் கிண்ண கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
சால்ஸ்பர்க் ரெட்புல் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் அஸ்டன் வில்லா அணியை சந்தித்து விளையாடினர்.
முற்பாதி ஆட்டத்தில் 20ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி ஆட்டக்காரர் குவரட்ஸ்கெலியா ஒரு கோலை அடித்து தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.
ஆட்டத்தின் ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் அஸ்டன் வில்லா அணியின் ஆட்டக்காரர் மட்ஜோ ஒரு கோலை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற பிற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின.
ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி ஆட்டக்காரர் டெசிரே டூ தமது அணியின் இரண்டாவது கோலை அடித்தார்.
தொடர்ந்து போராடிய அஸ்டன் வில்லா அணியினர் கோல் எதுவும் அடிக்காததால் 2-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணியினர் வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ஐரோப்பா சூப்பர் கிண்ணத்தையும் பிஎஸ்ஜி அணியினர் வென்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 10:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 5, 2026, 9:54 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
September 4, 2026, 10:18 am
அனைத்துலக கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற விரும்பும் பரேடெஸ் பிபா தடையை ஏற்க மறுக்கிறார்
September 4, 2026, 10:00 am
மெஸ்ஸிக்கு அர்ஜெண்டினா சிறப்பு மரியாதையை செலுத்துகிறது
September 3, 2026, 9:33 am
வீரர்கள் பரிமாற்ற சாதனையை மென்செஸ்டர் சிட்டி முறியடித்தது
September 3, 2026, 9:28 am
கடத்தல் சதித்திட்டத்தின் 26 முக்கிய நபர் இலக்குகளில் கிளையன் எம்பாப்பேவும் ஒருவர்
September 2, 2026, 8:35 am
பெர்னாண்டஸை 682.6 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்தது
September 2, 2026, 8:32 am
மெஸ்ஸியின் மரபு என்றென்றும் நிலைத்திருக்கும்: பெக்காம்
September 1, 2026, 12:34 pm
ஒலிம்பிக் போட்டியில் அஸிசூல்ஹஸ்னி தங்கம் வெல்வார்: இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு நம்பிக்கை
September 1, 2026, 10:42 am
