செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை கடற்கரை உட்பட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி: தமிழக அரசு உத்தரவு
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வரின் உத்தரவுப்படி சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகள், விளையாட்டுத் திடல்கள், பூங்காக்களில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டை மேற்கொள்ளும் விதமாக உயர்தரத்தில் இலவச வைஃபை வசதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி முதல்கட்டமாக மாநகராட்சிக்கு உட்பட்ட மெரினா கடற்கரை பகுதியில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 5 இடங்களிலும், தலைமைச் செயலக பூங்காவில் 12 இடங்களிலும் என மொத்தம் 44 இடங்களில் திங்கட்கிழமை முதல் இலவச வைஃபை வசதி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சேவையை பயன்படுத்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வைஃபையை ஆன் செய்து, ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள க்யூ-ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.
அதன் மூலம் வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்து வைஃபை வசதியை பெற்றுக்கொள்ளலாம். மக்கள் இதனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
