நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துபாயில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு: விசாரணைக்கு உத்தரவு

துபாய்:

துபாய் விமான நிலையத்தில் இந்தியா புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் ஒரே ஓடுபாதையில் நேருக்கு நேர் வந்ததால் கடைசி நேரத்தில் மோதல் சம்பவம் தவிர்க்கப்பட்டது.

கடந்த ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து ஐக்கிய அரபு அமீரக விமானப் போக்குவரத்து ஆணையம் நடத்தி வரும் விசாரணையின் அறிக்கையை இந்தியா கோரியுள்ளது.

துபாயில் இருந்து ஹைதராபாதுக்கு கடந்த 9ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது. அடுத்த 5 நிமிஷங்களில் பெங்களூருக்கு புறப்பட இருந்த எமிரேட்ஸ் விமானமும் அதே ஓடுபாதையில் வந்துள்ளது. இதனைக் கண்ட உடனே ஹைதராபாத் விமானப் புறப்பாட்டை உடனடியாக நிறுத்தும்படி விமானக் கட்டுப்பாட்டு அறை எச்சரித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

"இந்த சம்பவத்தில் விமானத்துக்கோ, பயணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கை வந்தவுடன் விமான புறப்பாடு நிறுத்தப்பட்டுவிட்டது. துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset