செய்திகள் மலேசியா
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் விமானி கைது; யாருடைய ஈடுபாட்டையும் முன்கூட்டியே உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது: போலிஸ்
ஷாஆலம்:
ஜாகர்த்தாவின் சோகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட விமானியின் வழக்கில், யாருடைய ஈடுபாட்டையும் முன்கூட்டியே உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் இதனை கூறினார்.
இதுவரை பல நபர்கள் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளதாகவும், அளிக்கப்பட்ட வாக்குமூலங்களில் தனது துறை திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறினார்.
அவர்கள் விமானிக்கு உதவினார்களா அல்லது அந்த கும்பலில் சந்தேக நபரின் ஈடுபாடு பற்றி அவர்களுக்குத் தெரியாதா என்பதை நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம்.
இந்த உள்நபர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதை நான் வெளிப்படுத்துவதற்கு இது மிக முன்கூட்டியதாகும். 4
வேறு நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தால், எனக்கு உறுதியான ஆதாரம் தேவை.
அதே சமயம், இதில் உள்நபர்கள் சம்பந்தப்படவில்லை என்பதையும் நான் மறுக்கவில்லை.
எனவே, கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்கும் பணி இன்னும் விசாரணையில்தான் உள்ளது. இதை வெளிப்படுத்த இன்னும் காலம் கனியவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 5:28 pm
போட்டித்தன்மையை தக்கவைத்துக் கொள்ள மலேசியா மனித மூலதனத்தை வலுப்படுத்த வேண்டும்: டத்தோஶ்ரீ இக்பால்
August 11, 2026, 5:27 pm
கல்வி நிறுவனங்களில் பகடிவதை வழக்குகள் அதிகரிப்பு; சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்: டத்தோ குமார்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
