செய்திகள் மலேசியா
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
சிப்பாங்:
அரசவை கழகத்தையும் அரசு குடும்பத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில் தவறான பதிவைப் போட்ட சமூக ஆர்வலர் ஒருவர் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட இஸ்லா வஹ்யூடி ஜைனுடின், நீதிபதி அகமத் ஃபுவாத் ஒத்மான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது தாம் குற்றமற்றவர் என விசாரணைக் கோரினார்.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி பிற்பகல் 3.20 மணியளவில் “randuk malaysia” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் இழிவான கருத்துகளைப் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சர்ச்சைக்குரிய பதிவு, ஜனவரி 24-ஆம் தேதி சைபர்ஜெயாவில் உள்ள மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக் ஆணையத்தின் (MCMC) தலைமையகத்தில் பார்க்கப்பட்டது.
1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக் சட்டத்தின் 233(1)(a) பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதே சட்டத்தின் 233(2) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரிங்கிட் 500,000 அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த வழக்கின் மறுவிசாரணையை நீதிமன்றம் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:57 pm
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
