செய்திகள் மலேசியா
சிறப்பு அமர்வுக்கு முன்பாக தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஏன் வெளியிடப்பட்டது: தக்கியூடின் கேள்வி
கோலாலம்பூர்:
தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீதான சிறப்பு அமர்வை ஒத்திவைக்க மக்களவை சபாநாயகர்டான்ஶ்ரீ ஜொஹாரி அப்துல் மறுத்ததைத் தொடர்ந்து, வெளிநடப்புக்குத் தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைமைக் கொறடா தக்கியூடின் ஹசான், அந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் பொதுமக்களுக்கு எவ்வாறு வெளியிடப்பட்டன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவாக, ஒரு அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்படுவதற்கு முன்பு, அது முதலில் தடை நிபந்தனைகளின் கீழ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தேசியக் கூட்டணி பொதுச் செயலாளர் கூறினார்.
இருப்பினும் தாபோங் ஹாஜி விசாரணை அறிக்கையை பொறுத்தவரை, அந்த அறிக்கை மக்களவைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலின் போதுதான் முதலில் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் பிரதமர் நேரில் ஆஜராகி அந்த அறிக்கையை ஆதரித்துப் பேசினால் தவிர, மக்களவையில் நடக்கும் விவாதத்திற்கும் நாடாளுமன்றத்திற்கு வெளியே நடக்கும் விவாதத்திற்கும் இப்போது எந்த குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும் இல்லை என்பதை இந்த நிலைமாற்றம் தெளிவாகக் காட்டுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
தாபோங் ஹாஜி பங்களிப்பாளர்களின் நலன்களுக்காகவும், நாட்டின் நிதி ஒருமைப்பாட்டிற்காகவும், அர்த்தமுள்ள விவாதத்திற்கும் கொள்கை நிர்ணயத்திற்கும் இடமளிக்காமல், 'ஒருவழி விளக்கங்களுக்கான' இடமாக நாடாளுமன்ற அமைப்பைப் பயன்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சி வலியுறுத்தியதாக தக்கியூடின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
கோத்தா பாரு நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: இரு சைக்கிளோட்டிகள் பலி
September 5, 2026, 10:42 am
