செய்திகள் மலேசியா
1 எம்டிபி: டானோர் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு 620 மில்லியன் அமெரிக்க டாலரைத் திருப்பித் தர உத்தரவிட்ட எரிக் டான்
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் 2013இல் பணம் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பிய 620 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி, அவரது வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படவில்லை.
வெளிநாட்டுச் சொத்து மீட்பு நிபுணர் ஒருவர் இன்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
1 எம்டிபியின் மூன்றாவது சாட்சியான ஏஞ்சலா பார்க்ஹவுஸ், நஜிப்பின் வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மது ஷாஃபி அப்துல்லாவின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.
அதாவது, அந்தப் பணத்தை அனுப்பிய தரப்பாக அவர் குறிப்பிட்ட டானோர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கே அந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டது என்ற கருத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
க்ரோல் (கேமன்) லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், க்ரோலின் வெளிநாட்டுச் செயல்பாட்டுப் பிரிவின் தலைவராகவும் இருக்கும் பார்க்ஹவுஸிடம், 2013இல் நடந்த 13ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அந்த நிதி திருப்பித் தரப்பட்டதா என்று முஹம்மது ஷாபி கேள்வி எழுப்பினார்.
ஆனால், அந்தக் காலக்கட்டத்தை தன்னால் உறுதிப்படுத்த முடியாது என்று பார்க்ஹவுஸ் பதிலளித்தார்.
பின்னர் அந்த வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் 681 மில்லியன் அமெரிக்க டாலரில் பயன்படுத்தப்படாத நன்கொடையான 620 மில்லியன் அமெரிக்க டாலரைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும், ஏனெனில் அவ்வளவு பெரிய தொகையைத் தனது வங்கிக் கணக்கில் வைத்திருப்பது அவருக்கு அசௌகரியமாக இருந்ததாகவும் சாட்சியிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:57 pm
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
