செய்திகள் மலேசியா
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
சிரம்பான்:
பாலியல் வல்லுறவு புரிந்தது, ஆபாச வீடியோ வைத்திருந்தது தொடர்பாக
18 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
முதல் குற்றச்சாட்டாக, கடந்த மே 24 அன்று கோத்தா, கம்போங் பத்து பூத்தே சாலை ஓரத்தில் உள்ள புதர் பகுதியில் சிறுமியின் பாலியல் வீடியோவை வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.
இதற்காக குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 பிரிவு 10-ன் கீழ் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை அல்லது RM10,000 அபராதம் விதிக்கப்படலாம்.
இரண்டாவது குற்றச்சாட்டாக, மே 27 அன்று பெடாஸ் அருகிலுள்ள மம்பாவ்-ரந்தாவ் சாலைப் புதர் பகுதியில் அச்சிறுமியைக் கற்பழித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம்375(g)-ன் கீழ் சுமத்தப்பட்ட இக்குற்றத்திற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட முடியும்.
நீதிபதி தஸ்னிம் அபு பக்கர், இரு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் RM5,000 பிணைத் தொகையை அனுமதித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியைத் தொடர்பு கொள்ளக்கூடாது, காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் மற்றும் கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
வழக்கு ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக நீதிமன்றம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதியை அடுத்த விசாரணை நாளாக நிர்ணயித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:57 pm
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
