செய்திகள் மலேசியா
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
கோலாலம்பூர்:
தாபோங் ஹாஜியின் சொத்து மதிப்பில் கடுமையான சரிவை ஏற்படுத்திய முதலீட்டு முடிவுகளை ஆய்வு செய்வதற்காக, ஒரு விரிவான, தொடர்ச்சியான தடயவியல் தணிக்கை உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
இந்த முன்மொழிவை பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் முன்வைத்தார்.
மேலும், நிதிப் பரிமாற்றத்தைக் கண்காணிக்கவும், ஏற்படக்கூடிய மோசடி, அதிகார துஷ்பிரயோகம், அலட்சியம் போன்ற கூறுகளைக் கண்டறியவும் சுதந்திரமான தடயவியல் தணிக்கை செயல்முறை மிகவும் முக்கியமானது.
தாபோங் ஹாஜி நிதிகளின் நிர்வாகத்தில் மிகவும் சிக்கலான நிர்வாக பலவீனங்களும் கசிவுகளும் இருப்பதால், ஒரு விரிவான, தொடர்ச்சியான தடயவியல் தணிக்கை உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
மோசடி, அதிகார துஷ்பிரயோகம் அல்லது அலட்சியம் ஆகியவற்றின் மூலம் தாபோங் ஹாஜி நிதிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்திய எவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இன்று நாடாளுமன்றத்தில் தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை தொடர்பான மக்களவை சிறப்புக் கூட்டத்தின் விவாத அமர்வில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:57 pm
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
