நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநில வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புது டெல்லி:

உத்தர பிரதேசம், பஞ்சாபில் அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் தொகுதியிலும், பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சன்னி, ரூப்நகர் மாவட்டத்திலுள்ள சம்கௌர் சாஹிப் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல், அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி, 58 தொகுதிகளிலும் இரண்டாம் கட்ட தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி, 55 தொகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் நொய்டாவிலும் போட்டியிடுகிறார். உத்தரகண்ட் முன்னாள் ஆளுநரும் பாஜக துணைத் தலைவருமான பேபி ராணி மெளரியா, ஆக்ரா தொகுதியில் போட்டியிடுகிறார் என்றார் அவர்.

"இந்த தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் வெற்றி பெறும்' என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

பஞ்சாப்: பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காணவுள்ள 86 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை ஆளும் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வெளியிட்டது.

அந்தப் பட்டியலின்படி, மாநில முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, ரூப்நகர் மாவட்டத்திலுள்ள சம்கௌர் சாஹிப் தொகுதியில் போட்டியிட உள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் களம் காண்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset