செய்திகள் மலேசியா
மலாக்கா டுரியான் துங்கால் துப்பாக்கி சூடு சம்பவம்: புக்கிட் அமான் குற்றப்புலாய்வு துறை இன்குவெஸ்ட் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யவுள்ளது
கோலாலம்பூர்:
மலாக்கா மாநிலத்தின் டுரியான் துங்காலில் போலிசாரால் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று ஆடவர்கள் மரணமடைந்த சம்பவம் குறித்த காரணத்தையும் அதன் தன்மையையும் கண்டறிய புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இன்னும் இரு நாட்களில் விசாரணை நீதிமன்ற நடவடிக்கைக்கான (இன்குவெஸ்ட்) விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யவுள்ளது.
இந்த தகவலை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இயக்குநர் டத்தோ எம்.குமார் கூறினார்.
இன்குவெஸ்ட் நடத்துவதற்கான முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற நடைமுறைகளின்படி விசாரணைக்கான தேதியைப் பெறுவதுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இன்குவெஸ்டுக்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்து, விசாரணைத் தேதி மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வோம்,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இன்குவெஸ்ட் விசாரணையில் சாட்சிகளாக அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்தாண்டு நவம்பர் 24ஆம் தேதி டுரியான் துங்காலில் போலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் மரணமடைந்தனர்.
ஆரம்பத்தில், இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 307ஆவது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்காக விசாரிக்கப்பட்டது.
எனினும், கடந்த டிசம்பர் மாதம், இந்த வழக்கை கொலை வழக்காக மறுவகைப்படுத்துமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மூன்று நபர்களின் மரணம் தொடர்பாக இன்குவெஸ்ட் விசாரணையை நடத்துமாறு AGC கடந்த ஜூலை 20ஆம் தேதி உத்தரவிட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2026, 3:49 pm
மாணவரை அறைந்த ஆசிரியர் RM 88,069 ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
August 10, 2026, 3:15 pm
பெட்ரோல் நிலையத்தில் கத்தியை வீசிய ஆடவருக்கு நான்கு நாட்கள் தடுப்பு காவல் விதிப்பு
August 10, 2026, 2:29 pm
