நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிளோட்டி மரணம்: மைவி கார் ஓட்டுநருக்கு ஆறு ஆண்டுகள் சிறை, 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம்  விதிப்பு 

ஜொகூர் பாரு: 

கடந்த வாரம் அபாயகரமான வகையில் வாகனத்தைச் செலுத்தி மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமான சிங்கப்பூரில் துப்புரவு பணியாளர் ஒருவர் இங்குள்ள மாஜிஸ்டிரெட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

குற்றஞ்சாட்டப்பட்ட 25 வயதான T.யுகேனுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை, 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது 

குற்றச்சாட்டு தமிழ்மொழியில் வாசிக்கப்பட்ட நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்நபர் குற்றத்தை மாஜிஸ்திரேட் நுர் ஃபதின் முஹம்மத் ஃபாரிட் முன்னிலையில் ஒப்புக்கொண்டார். 

விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது 

கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிகாலை 4.20 மணியளவில் கெலாங் பத்தாவில் 41 வயதான முஹம்மத் இசா டமிரி எனும் மோட்டார் சைக்கிளோட்டியின் மரணத்திற்குக் காரணமாக யுகேன் இந்த குற்றத்தை புரிந்தார். 

குற்றம் சாட்டப்பட்டவர் மீது 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset