செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு
சென்னை:
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தீர்மானத்திற்கு திமுக மற்றும் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று (திங்கள்கிழமை) தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
முதல்வர் விஜய் இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்து பேரவையில் பேசினார்.
"தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
திமுக தரப்பில் பேசிய கோவி. செழியன், "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது திமுக அரசுதான். 2021 டிச. 12ல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அதேபோல தமிழ்நாடு என பெயர் சூட்டியது அண்ணா, தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொண்டுவந்தது கருணாநிதி" என்று கூறி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
அதேபோல அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தமிழ் என்று வரும் நேரத்தில் நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரானது அல்ல. தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறு வேறானது அல்ல" என்று கூறி தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தார்.
இந்த தீர்மானத்திற்கு திமுகவும் அதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 9, 2026, 1:40 pm
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் 50-வது ஆண்டு விழாவை பயணிகள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
August 5, 2026, 4:09 pm
மூத்த குடிமக்களுக்கான இல்லம்: நிதியமைச்சர் மரிய வில்சன்
August 5, 2026, 4:05 pm
8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் ‘அண்ணன் சீர்’ திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
August 5, 2026, 3:59 pm
