செய்திகள் உலகம்
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் தேசிய தின விழாவை முன்னிட்டு சிங்கப்பூரின் ஆக உயரிய விருது இருவருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன். அவர் 14 ஆண்டாகத் தலைமை நீதிபதியாகச் சேவையாற்றுகிறார்.
இன்னொருவர் அதிபர் ஆலோசனை மன்றத்தின் முன்னாள் தலைவர் எட்டி தியோ (Eddie Teo).
35 ஆண்டாகப் பொதுத் துறையில் சேவையாற்றிய அவர் 2005இல் ஓய்வு பெற்றார்.
2019இல் அதிபர் ஆலோசனை மன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அந்தப் பொறுப்பிலிருந்து இவ்வாண்டு ஓய்வுபெற்றார்.
விருது தமக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய ஆங்கீகாரம் என்றார் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன்.
நீதித்துறையை வலுப்படுத்த அயராது உழைப்பவர்களுக்கு விருதை அர்ப்பணிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சுந்தரேஷ் மேனன் அடுத்த ஆண்டு ஓய்வுபெறுவார்.
தியோ, திரு சுந்தரேஷ் மேனன் உள்பட இவ்வாண்டு கிட்டத்தட்ட 7,500 பேருக்குத் தேசிய தின விருது வழங்கப்படுகிறது.
நாட்டிற்கு அவர்கள் ஆற்றிய தொண்டு, சேவையைப் போற்றும் விதமாக விருது வழங்கப்படுகிறது.
இவ்வாண்டு மேன்மைக்குரிய உன்னதச் சேவை விருது 5 பேருக்கு வழங்கப்படுகிறது.
அவர்களில் ஒருவர் 86 வயது டாக்டர் இஸ்கண்டார் ஜலில் (Iskandar Jalil).
சிங்கப்பூரின் தலைசிறந்த மண்பாண்டக் கலைஞர் அவர். அவர் 1988இல் காலசார விருது பெற்றார்.
அவர்களில் 110 இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
