செய்திகள் உலகம்
முஸ்லிம் நேட்டோ கூட்டமைப்பு உருவானது: பாக்கிஸ்தான், சவுதி, துருக்கி இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்
மக்கா:
பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடுகள் இடையே நேற்று முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தான், சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி எதிரி நாடுகளால் சவுதி அரேபியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் பாகிஸ்தான், சவுதி அரேபியாவுடன் புதிதாக துருக்கியும் கைகோத்து உள்ளது.
சவுதி அரேபியாவின் புனித மக்காவில் நேற்று சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சவுதி இளவரசர் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்த நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர், துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடுகள் இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முஸ்லிம் நேட்டோ கூட்டமைப்பு
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் 32 நாடுகள் இடம்பெற்று உள்ளன. இதில் பெரும்பாலானவை கிறிஸ்தவ நாடுகள் ஆகும். சர்வதேச அரங்கில் வலுவான ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ விளங்குகிறது. இதே பாணியில் பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடுகள் ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இது முஸ்லிம் நேட்டோ என்று அழைக்கப்படுகிறது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக சுமார் ஓராண்டுக்கும் மேலாக 3 நாடுகள் இடையே நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதன் இறுதிக் கட்டமாக தற்போது முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
