நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனப்புத்தாண்டில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்: சீன சுகாதாரத்துறை

அனைத்துலக விமானச் சேவைகள் சிலவற்றை சீனா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

பெய்ஜிங்:

சீனா கோவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிராகப் பெரும் அறைகூவல்களை எதிர்நோக்குவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சந்திரப் புத்தாண்டுக் காலத்தில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியத்திற்கு நாடு தயாராகிறது என்று சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஓமக்ரான் வகைக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் வெவ்வேறு நகரங்கில் பதிவாகியுள்ளன.

பெய்ச்சிங்கில் உள்ளூர் அளவில் அந்த வகைக் கிருமியால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்.

நாடு முழுவதும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

நேற்று 100க்கும் அதிகமான சம்பவங்கள் உள்ளூர் அளவில் ஏற்பட்டன.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 60க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

அதனையடுத்து அனைத்துலக விமானச் சேவைகள் சிலவற்றை சீனா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset