நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தின் நுழைவாயிலில் கட்டுப்பாட்டை இழந்த SUV வாகனம் மோதியது 

கோத்தா கினாபாலு: 

கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தின் புறப்பாட்டு பிரிவு நுழைவாயிலில் பெண் ஒருவர் ஒட்டி சென்ற SUV வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் லேசான காயங்களுடன் தப்பினார். 

நேற்று மாலை 4 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் நுழைவாயிலில் இருந்த கண்ணாடி கதவுகள் சுக்குநூறாக உடைந்து சேதமடைந்ததுடன், காரின் முன்பகுயும் பலத்த சேதமடைந்தது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் வேறு எந்தப் பயணிகளுக்கோ அல்லது விமான நிலைய ஊழியர்களுக்கோ எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வேளையில் லேசான காயங்களுக்கு இலக்கான பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலிஸ் தலைவர் ஷாருடின் மாட் ஹுசைன் கூறினார். 

கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையம் வழக்கம் போல் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset