செய்திகள் மலேசியா
பண்டார் என்ஸ்டெக் மருத்துவமனை ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளிக்க வசதி செய்கிறது
நீலாய்:
பண்டார் என்ஸ்டெக் மருத்துவமனை ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி செய்கிறது.
துவாங்கு ஜஃபார் மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்க இந்த மருத்துவமனை மக்களின் ஏற்புடையதாக அமையும் என்று அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சகத்தின் முயற்சிகளை வரவேற்ற அப்பகுதி மக்கள், குறிப்பாக முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியில்லாதவர்களுக்கு அருகாமையில் பொது சுகாதார வசதிகள் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றன என்று கூறினர்.
பண்டார் பாரு என்ஸ்டெக்கில் 20.23 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்றும், அது 2032-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் என்றும் சுகாதார அமைச்சர் சுல்கிஃப்ளி அஹ்மத் அறிவித்தார்.
மருத்துவமனையில் ஆரம்பத்தில் 350 படுக்கை வசதிகள் இருக்கும், பின்னர் படிப்படியாக 500 படுக்கைகளாக அதிகரிக்கப்படும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 1:48 pm
கிள்ளான் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மஹிமாவில் உறுப்பினராக பதிவு பெற்றது
August 8, 2026, 1:10 pm
கெடாவில் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு: இரு சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது
August 8, 2026, 1:00 pm
ஒற்றுமை அரசாங்கத்தில் DAP கட்சியின் நிலை: சுமூகமான முறையில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்
August 8, 2026, 12:48 pm
மலாக்கா மாநில தேர்தல்: பெர்சாமா கட்சி வேட்பாளர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளனர்
August 8, 2026, 12:33 pm
