நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு: இரு சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது

அலோர் ஸ்டார்:

நேற்றிரவு தாமான் அமிரா தெலாகா பத்தாவில் உள்ள வீடொன்றில் கடத்தல் நடவடிக்கையை முறியடித்த வேளையில் இரு வெளிநாட்டு சந்தேக நபர்களைப் போலிஸ் சுட்டுக்கொன்றது 

இந்த துப்பாக்கிச்சூடு நடவடிக்கையில் இரு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் எம். குமார் கூறினார்.

நேற்று இரவு 8.40 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் போலிஸாரை நோக்கி பல முறை சுட்டதாகவும் போலிஸ் தரப்பும் எதிர் தாக்குதல் புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் காப்பாற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

1961 கடத்தல் சட்டத்தின் செக்‌ஷன் 12யின் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.

விசாரணை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் யாரும் எந்தவொரு ஆருடங்களையும் வெளியிட வேண்டாம் என்று எம்.குமார் கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்த செய்தியாளர் சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset