செய்திகள் மலேசியா
பிரதமரின் சிறப்பு நிதி ஒதுக்கீடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அல்ல: டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் விளக்கம்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அல்ல; மாறாக அது மக்களுக்குச் சென்று சேர வேண்டியது என்று தொடர்பு அமைச்சர் டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
மலேசியத் திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, MyKHAS என்பது பிரதமரிடமிருந்து வழங்கப்படும் ஒரு சிறப்பு ஒதுக்கீடாகும், அதன் விநியோக முறையை அவரே தீர்மானிக்கிறார்.
சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது பிரதமரின் முடிவை பொறுத்தே அமைந்தது. ஆக, நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது குறித்து அவரே முடிவு செய்வார் என்று அவர் சொன்னார்.
கடந்த ஆகஸ்ட் 5 அன்று, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், ஜூலை 29 முதல் தனது தொகுதி MyKHAS அமைப்பை அணுகுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சமூக உதவிகள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 1:48 pm
கிள்ளான் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மஹிமாவில் உறுப்பினராக பதிவு பெற்றது
August 8, 2026, 1:10 pm
கெடாவில் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு: இரு சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது
August 8, 2026, 1:00 pm
ஒற்றுமை அரசாங்கத்தில் DAP கட்சியின் நிலை: சுமூகமான முறையில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்
August 8, 2026, 12:54 pm
பண்டார் என்ஸ்டெக் மருத்துவமனை ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளிக்க வசதி செய்கிறது
August 8, 2026, 12:48 pm
மலாக்கா மாநில தேர்தல்: பெர்சாமா கட்சி வேட்பாளர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளனர்
August 8, 2026, 12:33 pm
