செய்திகள் மலேசியா
சரவாக் மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
கூச்சிங்:
இந்தோனேசியாவின் கலிமந்தான் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ மற்றும் நிலத்தீ காரணமாகச் சரவாக் மாநிலத்தின் பல பகுதிகளில் புகைமூட்டம் மேலும் மோசமடைந்துள்ளது.
அங்குள்ள ஐந்து மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி, செரியான் பகுதியில் அதிகபட்சமாக 171 காற்று மாசுபடுத்தும் குறியீட்டு பதிவாகியுள்ளதாகச் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கூச்சிங் (154), சமரஹான் (154), ஸ்ரீ அமான் (139) மற்றும் பிந்துளு (124) ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
புகைமூட்டம் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 1:48 pm
கிள்ளான் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மஹிமாவில் உறுப்பினராக பதிவு பெற்றது
August 8, 2026, 1:10 pm
கெடாவில் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு: இரு சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது
August 8, 2026, 1:00 pm
ஒற்றுமை அரசாங்கத்தில் DAP கட்சியின் நிலை: சுமூகமான முறையில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்
August 8, 2026, 12:54 pm
பண்டார் என்ஸ்டெக் மருத்துவமனை ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளிக்க வசதி செய்கிறது
August 8, 2026, 12:48 pm
