நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை அரசாங்கத்தில் DAP கட்சியின் நிலை: சுமூகமான முறையில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் 

கோலாலம்பூர்: 

ஒற்றுமை அரசாங்கத்தில் DAP கட்சியின் நிலை குறித்து சுமூகமான முறையில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் 

இந்த விவகாரம் குறித்து எந்தவொரு தரப்பினர் முன்னமே கருத்தோ முடிவோ தெரிவிக்க வேண்டாம் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார். 

மக்களின் நலன் கருதி ஒற்றுமை அரசாங்கத்தில் DAP கட்சியின் இருப்பை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

முன்னதாக, DAP கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமா இல்லையா என்பது குறித்து அக்கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தது. 

4 ஆயிரம் பேராளர்கள் கலந்து கொள்ளவிருக்கும் இந்த மாநாட்டில் DAP கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இருப்பினும், முன்கூட்டியே நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலை நடத்துவது குறித்த சாத்தியத்தை டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் மறுத்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset