செய்திகள் மலேசியா
பூச்சோங் 14 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் இலவச மருத்துவ முகாம்; சமூக கடப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்படுகிறது: டத்தோ சிவம்
பூச்சோங்:
பூச்சோங் 14 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் இலவச மருத்துவ முகாம் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
பூச்சோங் 14ஆவது மைல் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் டத்தோ டாக்டர் ஏ.பி. சிவம் இதனை கூறினார்.
இந்த இலவச மருத்துவ முகாமில் பல் உட்பட15 பரிசோதனைகள் மக்களுக்காக நடத்தப்படுகிறது.
பூச்சோங் நாடாளுமன்ற சேவை மையம்,
பெட்டாலிங் மாவட்ட சுகாதாரத் துறை, பெட்டாலிங் மாவட்ட பல் சுகாதார துறை,
செர்டாங் மருத்துவமனை வருகையாளர்கள் குழு ஆகியவற்றுடன் இணைந்து இம்மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
ஆலய தரப்பினருடன் மட்டுமல்லாமல் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இலவச உடல்நல கருத்தரங்குகள், சுகாதார முகப்புகள் யாவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் நோய் தொடர்பான மேலதிக விபரங்களையும் தகவல்களையும் பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்தது என்று டத்தோ ஏபி சிவம் கூறினார்.
பொதுமக்கள் குறிப்பாக இந்தியர்கள் தங்களின் உடல்நலம் மீது அதீத அக்கறை கொள்ளாமல் இருப்பது பெரும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இதனை களையும் பொருட்டு இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆலய நிர்வாகங்கள் சமய வழிபாடுகளை மட்டும் கவனம் செலுத்தாமல் இது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சமூக கடப்பாட்டின் அடிப்படையில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று டத்தோ சிவம் கூறினார்.
இதனிடையே இந்த மருத்துவ முகாமில் சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் ஜமாலியா, பூச்சோங் 14 மைல் சுகாதார மையத்தின் பல் மருத்துவ பிரிவு சுகாதார அதிகாரி டாக்டர் மஞ்ஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 1:10 pm
கெடாவில் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு: இரு சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது
August 8, 2026, 1:00 pm
ஒற்றுமை அரசாங்கத்தில் DAP கட்சியின் நிலை: சுமூகமான முறையில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்
August 8, 2026, 12:54 pm
பண்டார் என்ஸ்டெக் மருத்துவமனை ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளிக்க வசதி செய்கிறது
August 8, 2026, 12:48 pm
மலாக்கா மாநில தேர்தல்: பெர்சாமா கட்சி வேட்பாளர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளனர்
August 8, 2026, 12:33 pm
சரவாக் மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 8, 2026, 11:18 am
