செய்திகள் உலகம்
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
காஸா:
கடந்த 2023, நவம்பர் 22-ம் தேதி அன்று இஸ்ரேல் இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட படுகொலை தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களில் சுமார் 72,000 பேர் உயிரிழந்ததாக தகவல்.
கடந்த 2023, நவம்பர் 22-ம் தேதி அன்று இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் குடியிருப்பு பகுதிகள் கடும் சேதமடைந்தன. அதில் வசித்து வந்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 300 என உள்ளூர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அதில் 40 பேரின் உடல்கள் அப்போது மீட்கப்பட்டது. எஞ்சிய உடல்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் அந்த பகுதியில் மீண்டும் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது. அதில் சுமார் 112 பேரின் உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டது. இதில் 40 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், மீட்கப்பட்ட 112 பேரின் உடலும் பாலஸ்தீன தேசிய கொடியால் போர்த்தப்பட்டு, இறுதி தொழுகைக்கு பிறகு காசாவில் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கில் ஏரளாமான மக்கள் பங்கேற்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
