செய்திகள் விளையாட்டு
டத்தோ சம்பந்தன் கிண்ண கால்பந்து போட்டியில் எச்எஸ்எம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
செமினி:
தேசிய ஐபிஎப் இளைஞர் பிரிவு, உலுலங்காட் ஐபிஎப் இளைஞர் அணி ஏற்பாட்டில் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன் கிண்ண ஒன்பதின்மர் கிண்ண கால்பந்து போட்டி நேற்று செமினி திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
லீக் பாணியில் நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 16 குழுக்கள் பங்கேற்றது.
இந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் எச்எஸ்எம் கிளப் 4-3 என்ற பெனால்டி கிக்கில் யாசோ எப்சி கிளப்பை வீழ்த்தி டத்தோ எம் சம்பந்தன் கிண்ணத்தையும் 2,500 ரிங்கிட் ரொக்கத்தையும் தட்டிச் சென்றது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த யோசே எப்சி கிளப்புக்கு 1,500 ரிங்கிட் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த போட்டியில் கெமெந்தா கிளப் 4ஆவது இடத்தையும் கணபதி எப்சி 3ஆவது இடத்தையும் பிடித்தது.
போட்டியை காண சிறப்பு வருகை தந்த ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன், துணை தலைவர்
டத்தோ வேலாயுதம் ஆகியோர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர்.
கப்பளா பத்தாஸ் தொகுதி தலைவர் தீனா,
டயானா கேட்டர்ஸ் உரிமையாளர் சாமி, தொழில் அதிபர் டத்தோ வனத்தையா, ஐபிஎப் தலைமை செயலாளர்
மோகன் மற்றும் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ஐபிஎப் கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் கணேஷ் குமார் சம்பந்தன் அவர்கள் இந்த போட்டியை மிகவும் விமரிசையாக நடத்தி முடித்தார்.
பூச்சோங்கை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் சுகன், அர்வின் ஆகியோர் போட்டி வெற்றி பெற முழு ஆதரவு வழங்கினர்.
இவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
