செய்திகள் விளையாட்டு
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு: 8 தங்கப் பதக்கங்களுடன் மலேசியா 10ஆம் இடத்தில் போட்டியை முடித்தது
கிளாஸ்கோ:
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அதிகாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் இசை கொண்டாட்டங்கள், கண்கவர் நடனங்கள் என பல படைப்புகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் 2030ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டியை ஏற்று நடத்தும் நகரமாக இந்தியாவின் அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
A CONCERT OF CELEBRATION எனும் கருப்பொருளில் நிறைவு விழா நடந்த நிலையில் அதில் காமன்வெல்த் போட்டியில் பங்கெடுத்த வீரர்கள், வீரங்கனைகள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
விளையாட்டுக் கொடியானது இறக்கப்பட்டு, கிளாஸ்கோவின் லார்ட் ப்ரோவோஸ்ட் ஜாக்குலின் மெக்லாரனிடம் வழங்கப்பட்ட பின்னர், காமன்வெல்த் விளையாட்டுத் தலைவர் டொனால்ட் ரூகாரேவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் ரூகரே, இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரமான நீரஜ் சோப்ராவிடம் கொடியை ஒப்படைத்தார்.
அவர் அதனை குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவியிடம் வழங்கினார், அவர் அதனைப் பெற்றுக்கொண்டார்.
இதன்மூலம் அகமதாபாத் அடுத்த புரவலர் நகரமாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.
பின்னர், மூன்றாம் சார்லஸ் மன்னரின் பிரதிநிதியாக, இளவரசர் எட்வர்ட், விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததாக அறிவித்தார்.
இந்த முறையில் காமன்வெல்த் போட்டியில் மலேசியா 8 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 10ஆம் நிலையைப் பிடித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
