செய்திகள் தமிழ் தொடர்புகள்
8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் ‘அண்ணன் சீர்’ திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
சென்னை:
பெண்களின் திருமண நன்னாளில் தமிழக அரசின் சார்பாக எட்டு கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அண்ணனின் சீராக வழங்கப்படும் என்றும், இத்திட்டத்துக்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணன் சீர்:
சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் அண்ணனாகவும், தம்பியாகவும் இருந்து, அவர்களுக்கு எப்போதும் துணை நிற்பவர்தான் நமது முதலவர் விஜய். திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகும்.
இந்தத் தருணத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாட்டின் பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதும் நமது முதல்வர், அப்பெண்களின் திருமண நன்னாளில் நமது அரசின் சார்பாக எட்டு கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அண்ணனின் சீராக வழங்கவிருக்கிறார்.
இத்திட்டத்தினைச் செயல்படுத்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 9:58 am
நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று தமிழக பேரவையில் தனித் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது
August 10, 2026, 1:16 pm
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு
August 9, 2026, 1:40 pm
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் 50-வது ஆண்டு விழாவை பயணிகள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
August 5, 2026, 4:09 pm
மூத்த குடிமக்களுக்கான இல்லம்: நிதியமைச்சர் மரிய வில்சன்
August 5, 2026, 3:59 pm
