செய்திகள் தமிழ் தொடர்புகள்
புனித ஹஜ் பயணத்துக்கான அரசு மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை:
புனித ஹஜ் பயணத்துக்கான அரசு மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட் உரையில், “மதச்சார்பற்ற சமூக நீதி அரசாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முன்னோடி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழும்.
சிறுபான்மையின மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையினை இந்த அரசு தொடர்ந்து வழங்கும். தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலம் முதல்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் மானியம் நமது அரசால் 35,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் 1.05 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கூடுதலாகத் துவக்கப்படும். மேலும், கபர்ஸ்தான்கள், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:06 pm
சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் எழுதிய கடிதம் வெளியானது
September 22, 2026, 3:23 pm
சென்னையில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
September 21, 2026, 10:34 pm
சூதாட்ட நோக்கம் இல்லை; தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை இல்லை: டிஜிபி விளக்கம்
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
