நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சோலார் ஊழல் குற்றத்தீர்ப்பு மேல்முறையீட்டில் புதிய சான்றுகளைச் சமர்ப்பிக்க  ரோஸ்மா அனுமதி கோரினார்

புத்ராஜெயா:

கிட்டத்தட்ட 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கலப்பின சூரியசக்தி திட்ட ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் புதிய சான்றுகளைச் சமர்ப்பிக்க, ரோஸ்மா மன்சோர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அனுமதி கோரி ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்.

ஜூலை 21 தேதியிட்ட ஒரு மனு அறிவிப்பில், தனது மேல்முறையீட்டு விசாரணையின் போது மூன்று கூடுதல் ஆவணங்களைச் சான்றுகளாகச் சமர்ப்பிக்க, 1964 ஆம் ஆண்டின் நீதித்துறை நீதிமன்றச் சட்டத்தின் பிரிவு 61, 1994 ஆம் ஆண்டின் மேல்முறையீட்டு நீதிமன்ற விதிகளின் 68, 69 ஆகியவற்றின் கீழ் ரோஸ்மா அனுமதி கோரியுள்ளார்.

அந்த மனுவை ஆதரிக்கும் பிரமாணப் பத்திரத்தில், விசாரணையின் போது அரசுத் தரப்பு சாட்சியான ரய்யான் ராட்ஸ்வில் அப்துல்லா, தான் குற்றவாளி என்பதைக் காட்டுவதற்காக சாட்சியம் அளிக்குமாறு வற்புறுத்தப்பட்டதாக ரோஸ்மா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர், ஷம்சுடின் அண்ட் கோ நிறுவனத்திடமிருந்து ஜூலை 10 தேதியிட்ட ஒரு முகப்புக் கடிதத்தையும், அதே நாளில் ரய்யான் அளித்த ஒரு காவல் துறை அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

மேலும், அவர் ஜூலை 10 அன்று ரய்யான் உறுதிமொழி எடுத்த ஒரு சட்டப்பூர்வ பிரமாணப் பத்திரத்தையும், 2020 ஆகஸ்ட் 3ஆம் தேதியிட்ட ஒரு கூடுதல் பிரமாணப் பத்திரம் உட்பட அதன் இணைப்புகளையும் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset