நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிப்பாங் போலிஸ் தலைமையகம் அருகிலுள்ள பகுதியில் கடுமையான காட்டுத்தீ 

சிப்பாங்: 

சிப்பாங் போலிஸ் தலைமையகம் அருகிலுள்ள மலைப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டது. 

சுமார் ஏழு ஏக்கர் நிலம் இந்த தீயில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஸ்ருல் ரிசால் கூறினார் 

தங்கள் தரப்புக்கு அதிகாலை 1.28 மணி காட்டுத் தீ குறித்து அவசர அழைப்பு கிடைத்ததாகவும் KLIA தீயணைப்பு மீட்புப்படை அதிகாரிகள் முதற்கட்டமாக அங்கு விரைந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

"தீ அருகிலுள்ள பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று அவர் திங்களன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் BBP KLIA-வைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள், BBP சிப்பாங்கின் உதவியுடன் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இழப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset