நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானை தொடர்ந்து மலாக்காவை நீல நிறமாக்குவோம்; செப்டம்பர் மாதத்திற்குப் பின் மலாக்கா தேர்தல்: கோடிக் காட்டினார் ராவ்ஃப்

மலாக்கா:

நெகிரி செம்பிலானில் தற்போது வீசிய  நீல அலை மலாக்கா மாநிலத்திற்கு மாற வேண்டும்.

மலாக்கா மாநிலத் தேர்தல் செப்டம்பருக்குப் பிறகு நடத்தப்படலாம் என்று மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ராவ்ஃப் கோடிக் காட்டினார்.

நான் தற்போது ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.

இந்த வார இறுதிக்குள் முதலமைச்சரின் 'சயாங் ரக்யாட்' சுற்றுப்பயணத் தொடரின் 12 சட்டமன்றங்களை நான் நிறைவு செய்திருப்பேன்.

நம்மிடம் தொகுதிகள் இல்லை, கூட்டிக் கழித்தால், 22 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே உள்ளன.

எனவே, நாளை இந்த 22  சட்டமன்றங்களுக்குப் பிறகு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து முதலில் இந்த மலாக்கா மாநிலத்தை நீல நிறமாக்குவோம்."

நெகிரி செம்பிலான் வெற்றிகரமாக நீல நிறமாக்கப்படுவதைக் காணும்போது, ​​மலாக்கா மக்களின் வெளிப்பாடாக அமையும் ஒரு சந்திப்புப் புள்ளியை இப்போது நாங்கள் காண விரும்புகிறோம் என்று  அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset