செய்திகள் மலேசியா
கெடாவில் முஹம்மத் சனூசி நோரின் வாக்குமூலத்தைக் காவல்துறை பதிவு செய்யும்: ஐ.ஜி.பி டான்ஶ்ரீ காலித் இஸ்மாயில் தகவல்
சிரம்பான்:
அண்மையில் ஜெம்பொலில் தேர்தல் பரப்புரையின் போது இனவாத கூற்றை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சனுசி நோருக்கு எதிராக வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக ஐ.ஜிபி டான்ஶ்ரீ காலித் இஸ்மாயில் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. போலிஸ் ஒரு விசாரணை அறிக்கையை திறக்கும் நிலையில் அது தேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சனூசி நோர் கெடாவில் இருப்பதால் புக்கிட் அமானைச் சேர்ந்த போலிஸ் அதிகாரிகள் கெடாவிற்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வார்கள் என்று காலித் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
தேசிய கூட்டணியின் தேர்தல் இயக்குநராக இருக்கும் சனூசி நோர் பேசிய இனவாத கூற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தாம் நாட்டின் வரலாற்றைக் கூறியதாகவும் யாரையோ அல்லது எந்த சமூகத்தையோ சொந்த நாட்டிற்கு செல்ல சொல்லவில்லை என்று சனூசி பிறகு விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2026, 7:30 pm
DAP பொதுச்செயலாளர் அந்தோனி லோக் 1,825 வாக்குகள் பின்தங்கியுள்ளார்
August 1, 2026, 7:20 pm
தேசிய முன்னணி 14 தொகுதிகளில் முன்னிலை: பாகத்தான் ஹரப்பான் எட்டு தொகுதிகளில் முன்னிலை
August 1, 2026, 6:16 pm
நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது (LIVE)
August 1, 2026, 6:06 pm
