செய்திகள் மலேசியா
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்: BN-PN கூட்டணி வெற்றி: அரசாங்கத்தை அமைக்க போதிய சட்டமன்ற இடங்களை வெற்றிக்கொண்டது
சிரம்பான்:
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி மாநில அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பெரும்பாண்மை இடங்களை வென்றுவிட்டதாக அறிவித்துள்ளனர்.
இரு கூட்டணி கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில் தற்போது 23 இடங்கள் வரை வெற்றிக்கொண்டுள்ளதாக அம்னோவின் தலைமை செயலாளர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி கூறினார்.
இது நெகிரி செம்பிலானில் பக்கத்தான் ஹரப்பானின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, BN-PN கூட்டணிக்குக் கிடைக்கும் முதல் தேர்தல் வெற்றியாகவும் அமையும்.
இந்நிலையில் தேசிய முன்னணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தேசிய முன்னணி, தேசிய கூட்டணி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் விஸ்மா அம்னோவில் வருகை தந்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2026, 7:30 pm
DAP பொதுச்செயலாளர் அந்தோனி லோக் 1,825 வாக்குகள் பின்தங்கியுள்ளார்
August 1, 2026, 7:20 pm
தேசிய முன்னணி 14 தொகுதிகளில் முன்னிலை: பாகத்தான் ஹரப்பான் எட்டு தொகுதிகளில் முன்னிலை
August 1, 2026, 6:16 pm
நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது (LIVE)
August 1, 2026, 6:06 pm
