செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி 14 தொகுதிகளில் முன்னிலை: பாகத்தான் ஹரப்பான் எட்டு தொகுதிகளில் முன்னிலை
கோலாலம்பூர்:
ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையின்படி, தேசிய முன்னணி 14 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சியான பெரிகாத்தான் நேஷனலும் இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகத்தான் ஹரப்பான் எட்டு தொகுதிகளில் அதன் போட்டியாளர்களை விட முன்னிலை வகிக்கிறது.
ரெப்பா, செரம்பன் ஜெயா, ரஹாங் ஆகிய தொகுதிகளில் பாரிசான் நேஷனல் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளது. பஹாவ், புக்கிட் கெபாயாங் மற்றும் மம்பாவ் ஆகிய தொகுதிகளில் பாகத்தான் ஹரப்பான் முன்னிலை வகிக்கிறது.
நெகிரி செம்பிலான் முழுவதும் வாக்குப்பதிவு அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துள்ளது. இரண்டு வார கால தீவிர பிரச்சாரத்திற்குப் பிறகு, வாக்காளர்கள் அனைத்து 36 மாநிலத் தொகுதிகளுக்கும் வாக்களித்துள்ளனர். அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான போட்டி தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் ஒரு பதட்டமான நிலையில் உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2026, 7:30 pm
DAP பொதுச்செயலாளர் அந்தோனி லோக் 1,825 வாக்குகள் பின்தங்கியுள்ளார்
August 1, 2026, 6:16 pm
நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது (LIVE)
August 1, 2026, 6:06 pm
