நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்: அதிகாரப்பூர்வமற்ற முடிவில் அந்தோனி லோக், அமினுடின் ஹருன் அதிர்ச்சி தோல்வி 

சிரம்பான்: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் DAP கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக், PH நெகிரி செம்பிலான் தலைவருமான டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் தோல்வி அடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவில் தெரியவந்துள்ளது 

சென்னாவில் தேசிய முன்னணி முன்னிலை வகிக்கும் நிலையில் நம்பிக்கை கூட்டணி சார்பாக போட்டியிட்ட அந்தோனி லோக் பின்னடைவை சந்தித்துள்ளார். 

அதேபோல லிங்கியில் தேசிய முன்னணி முன்னிலை வகிக்கும் நிலையில் எளிதாக வெற்றிப்பெறுவார் என்று நினைத்த நடப்பு மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் பின்னடைவை சந்தித்து வருகிறார். 

தேசிய முன்னணி, தேசிய கூட்டணி இந்த தேர்தலில் 21 சட்டமன்ற இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset