நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எம்ஐஎஸ்சி - டச்ட்ரோனிக் அணி ஒன்பது வீரர்களுடன் மொக்தார் டஹாரி அணியுடன் சமநிலை கண்டனர்

ஷாஆலம்:

எம்ஐஎஸ்சி - டச்டுரோனிக் அணி ஒன்பது வீரர்களுடன் மொக்தார் டஹாரி அணியுடன் சமநிலை கண்டனர்.

பிரசிடெண்ட் கிண்ண கால்பந்து போட்டியின் லீக் ஆட்டம் நேற்று இரவு ஷாஆலமில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் எம்ஐஎஸ்சி - டச்ட்ரோனிக் அணியினர்  மொக்தார் டஹாரி அகாடமி அணியுடன் மோதினர்.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் மாறி மாறித் தாக்கியதால், போட்டி சமநிலையில் இருந்தது.

முதல் பாதியின் கூடுதல் நேரத்தில், 45ஆவது நிமிடத்தில் முகமது இமான் இர்பான் முகமது ஹபிஸ் அடித்த ப்ரீ கிக் மூலம் மொக்தார் டஹாரி அணி முதலில் கோல் கணக்கைத் தொடங்கியது. 

இதன் மூலம் முற்பாதி நேர ஆட்ட முடிவில் அவ்வணி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் நுழைந்தபோது, எம்ஐஎஸ்சி - டச்ட்ரோனிக் அணி சமநிலை செய்யும் முயற்சியில் மேலும் ஆக்ரோஷமாகக் காணப்பட்டது.

ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில், ஆர். பிரவினாஷின் ஃப்ரீ கிக்கை முகமது ஹாசிக் முகமது ஹாஃபிஸ் நேர்த்தியாக கோலாக மாற்றி, ஆட்டத்தை 1-1 என சமநிலை செய்தார்.

பிரவினாஷ், எம்ஐஎஸ்சி - டச்ட்ரோனிக் அணிக்கு ஒரு முக்கிய வீரராகத் தொடர்ந்து விளங்கினார். 

அவர் சமநிலை செய்யும் கோலுக்கு வித்திட்டது மட்டுமல்லாமல், 90 நிமிடங்கள் முழுவதும் தனது ஆற்றல்மிக்க ஆட்டத்தால் அணியை வழிநடத்தி, ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், 84ஆவது நிமிடத்தில் வான் முகமது மிகைலுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.

இருந்தாலும் 9 ஆட்டக்காரர்களுடன் போராடிய எம்ஐஎஸ்சி - டச்ட்ரோனிக் அணி ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொண்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset