நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

காமன்வெல்த் வரலாற்றில் எடைத் தூக்கும் பிரிவில் பதக்கம் வென்று நோர் அகிலா சாதித்துள்ளார்.

கிளாஸ்கோ:

கிளாஸ்கோ ஆர்மடில்லோவில் நடைபெற்ற பெண்களுக்கான 87 கிலோவுக்கு மேற்பட்ட  எடை தூக்கும் போட்டியில், நோர் அகிலா ப்ர்ஹானா  வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா மறக்க முடியாத ஒன்றை தொடர்ந்து படைத்து வருகிறது.

இந்தப் போட்டிகளில் முதல் முறையாகப் போட்டியிடும் 20 வயதான இந்த வீராங்கனை, ஸ்னாட்ச் பிரிவில் 113 கிலோ எடையைத் தூக்கித் தொடங்கி, பின்னர் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 140 கிலோ என மொத்தம் 253 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், எடைத் தூக்கும் போட்டியில் ஒரு மலேசிய வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முந்தைய இரண்டு வெண்கலப் பதக்கங்களை, 2010 டில்லி போட்டிகளில் ரெய்ஹான் யூசோஃப் (53 கிலோ),  கடந்த திங்கட்கிழமை கிளாஸ்கோவில் ஐரீன் ஜேன் ஹென்றி (48 கிலோ) ஆகியோர் வென்றிருந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset