செய்திகள் விளையாட்டு
ஆசியான் கிண்ண கால்பந்து போட்டி: லாவோஸை வீழ்த்தியது மலேசியா
கோலாலம்பூர்:
ஆசியான் கிண்ண கால்பந்து போட்டியின் பி குழு நிலையிலான ஆட்டத்தில் மலேசியா 4-0 என்ற கோல் கணக்கில் லாவோஸ் அணியை பந்தாடியது
இந்த வெற்றியின் மலேசியா அணி மூன்று புள்ளிகளை வெற்றிக்கொண்டது. அடுத்து மலேசியா தாய்லாந்து அணியை சந்தித்து விளையாடவுள்ளது.
இவ்வாட்டம் தாய்லாந்து நாட்டின் ராஜமங்களா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
மலேசியா தாய்லாந்து அணியை எதிர்கொள்ள வல்லமை கொண்டுள்ளதால் மலேசியா வெற்றிப்பெறும் என்று தாம் நம்புவதாக மலேசியா அணியின் இடைக்கால பயிற்றுநர் டான் செங் ஹொ கூறினார்.
மலேசியா அணியைச் சேர்ந்த ஜி. பவித்திரன் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி நேற்றைய ஆட்டத்தின் வெற்றியை உறுதி செய்தார் என்று அவர் தெரிவித்தார்.
பி குழுவில் இருக்கும் மலேசியா ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து தாய்லாந்து, மியன்மார் அணிகளும் தலா மூன்று புள்ளிகளைப் பெற்ற்று அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
--மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2026, 11:33 am
பிரான்ஸ் நாட்டு காற்பந்து அணியின் புதிய பயிற்றுநராக சினெடின் சிடான் நியமனம்
July 29, 2026, 9:10 am
கிளாஸ்கோவில் வரலாறு படைத்ததில் பெருமிதம் கொள்கிறேன்: இஸாத் ஷமீர்
July 29, 2026, 9:06 am
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசியாவின் ஐந்து தங்கப்பதக்க இலக்கை லத்தீப் நிறைவு செய்தார்
July 28, 2026, 10:09 am
2026 காமன்வெல்த் போட்டி: முஹம்மத் அஸ்னில் தங்கப் பதக்கம் வென்றார்
July 27, 2026, 11:11 am
யூரோ 2028 போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற வேண்டும்
July 26, 2026, 1:50 pm
