நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தைப்பே பொதுப் பூப்பந்து போட்டி:  நாட்டின் ஒற்றையர் ஆட்டக்காரர் லீ ஜீ சியா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம் 

பெட்டாலிங் ஜெயா- 

தைப்பே பொதுப் பூப்பந்து போட்டி தைவானில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் நாட்டின் தேசிய ஆண் ஒற்றையர் ஆட்டக்காரரான LEE ZIE JIA  அவர்கள் தைவானின் லியோவ் ஜுவோ ஃபூ ஆட்டக்காரரை வீழ்த்தினார். 

LEE ZIE JIA,  22-24, 21-12,21-15 எனும் புள்ளியில் வீழ்த்தினார் 

நாளை அவர், தைவானைச் சேர்ந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன் லீ சுன் யீ அல்லது இந்தோனேசியாவின் அந்தோனி சினிசுகா கிண்டிங் ஆகியோருக்கு எதிராக ஒரு கடினமான இரண்டாவது சுற்றுப் போட்டியை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் ஒரே பிரதிநிதியான கோ ஜின் வெய், இரண்டாவது ஆட்டத்தில் வலுவாக மீண்டு வந்தபோதிலும், கனடாவின் ஜாங் வென் யூவிடம் 17-21, 20-22 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset