நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

காமன்வெல்த் கெய்ரின் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்ல அஸிசூல்ஹஸ்னி முனைப்பு

கிளாஸ்கோ:

காமன்வெல்த் கெய்ரின் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்லும் முனைப்பில் தேசிய உள்ளரங்கு சைக்கிளோட்ட வீரர் டத்தோ அஸிசூல்ஹஸ்னி அவாங் உள்ளார். 

அவர் தனது விளையாட்டு வாழ்வில் இதுவரை வெல்லாத ஒரே பட்டத்திற்கான தனது தேடலை, ​​

நாளை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் கெய்ரின் பிரிவில் போட்டியிடுவதன் மூலம் தொடங்குகிறார்.

38 வயதான இவர், கிளாஸ்கோவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் தனது இறுதிப் பங்கேற்பை மேற்கொள்கிறார். 

கெய்ரின், தனிநபர் ஸ்பிரிண்ட் சனிக்கிழமை, ஒரு கிலோமீட்டர் நேரப் போட்டி ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நிகழ்வுகளில் அவர் போட்டியிடுகிறார்.

தனக்குப் பிடித்தமான போட்டியில் நாளை அவர் தனது பயணத்தைத் தொடங்குவதால், புத்துணர்ச்சியுடன் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஜப்பானில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட காயங்கள் காரணமாக இங்கிலாந்து வீரர் மேத்யூ ரிச்சர்ட்சன் விலகுவதாக உறுதிப்படுத்தியதை அடுத்து, இந்தப் போட்டியில் தங்கம் வெல்வதற்கான அஸிசூல்ஹஸ்னியின் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset