செய்திகள் விளையாட்டு
மடானி F1 டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருகிறது
சிப்பாங்:
கோலாலம்பூர், சிப்பாங்கில் நடைபெறவிருக்கும் AIR BAHRAIN GRAND PRIX பந்தயத்திற்கு மடானி F1 டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருவதாக நாட்டின் இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் டாக்டர் முஹம்மத் தௌஃபிக் ஜொஹாரி கூறினார்.
பயணச்சீட்டுகளை விற்பனை செய்வதற்கும் விநியோகிப்பதற்குமான உரிமைகள் பஹ்ரைன் அமைப்பாளர்களிடம் இருப்பதால், அந்த முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
இன்னும் எத்தனை டிக்கெட்டுகள் தங்கள் தரப்புக்கு வழங்குவார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறோம்.
உரிய பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த பிறகு அரசாங்கம் அறிவிக்கும் என்று அமைச்சர் சொன்னார்.
முன்னதாக, சிப்பாங் அனைத்துலக பந்தய தளத்திற்கு அமைச்சர் தொழில்முறை பயணம் மேற்கொண்டு செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
மலேசியாவில் கடந்த 1999 முதல் 2017 ஆண்டுகள் வரை சிப்பாங்கில் பந்தய போட்டிகள் நடந்துள்ளன.
எதிர்வரும் அக்டோபர் மாதம் மலேசியாவில் BAHRAIN F1 GP பந்தய போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2026, 11:29 am
FIFA உலகக் கிண்ண இடைவேளைக்குப் பிறகு மியாமி காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டார் லியோனல் மெஸ்ஸி
July 30, 2026, 11:12 am
காமன்வெல்த் கெய்ரின் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்ல அஸிசூல்ஹஸ்னி முனைப்பு
July 30, 2026, 10:58 am
மலேசியாவின் ஆறாவது தங்கப் பதக்கத்தை ஷாஹ்மி வென்றார்
July 29, 2026, 11:33 am
பிரான்ஸ் நாட்டு காற்பந்து அணியின் புதிய பயிற்றுநராக சினெடின் சிடான் நியமனம்
July 29, 2026, 10:47 am
ஆசியான் கிண்ண கால்பந்து போட்டி: லாவோஸை வீழ்த்தியது மலேசியா
July 29, 2026, 9:10 am
கிளாஸ்கோவில் வரலாறு படைத்ததில் பெருமிதம் கொள்கிறேன்: இஸாத் ஷமீர்
July 29, 2026, 9:06 am
