நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

FIFA உலகக் கிண்ண இடைவேளைக்குப் பிறகு மியாமி காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டார் லியோனல் மெஸ்ஸி 

மியாமி: 

FIFA உலகக் கிண்ண போட்டி முடிந்து 10 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தனது அமெரிக்க காற்பாந்து கிளப்பான இந்தர் மியாமி அணியின் காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டார் அவ்வணியின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி 

மியாமி அணியின் மற்றொரு காற்பந்து வீரரான லுயிஸ் சுவாரெஸ் உடன் அவர் காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளதைக் காட்டும் வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் அவ்வணி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது 

கடந்த ஜூலை 19ஆம் தேதி நடந்த FIFA உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

அதன் பிறகு லியொனல் மெஸ்ஸி தனது குடும்பத்தினருடன் அர்ஜெண்டினாவின் சொந்த ஊரான ரொசாரியோவில் ஓய்வில் இருந்தார் 

மெஸ்ஸி மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தர் மியாமி எதிர்வரும் சனிக்கிழமை கொலம்பஸ் க்ரூ அணியை எதிர்கொள்கிறது.

அதனைத் தொடர்ந்து, எம்.எல்.எஸ் மற்றும் மெக்சிகன் அணிகளுடன் இணைந்து நடத்தப்படும் லீக்ஸ் கோப்பைப் போட்டியில் பங்கேற்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset