நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரான்ஸ் நாட்டு காற்பந்து அணியின் புதிய பயிற்றுநராக சினெடின் சிடான் நியமனம் 

பாரிஸ்: 

பிரான்ஸ் நாட்டு காற்பந்து அணியின் புதிய பயிற்றுநராக சினெடின் சிடான் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த அறிவிப்பை பிரான்ஸ் காற்பந்து கூட்டமைப்பு வெளியிட்டது. பல வருட காத்திருப்புக்குப் பின் 54 வயதான சிடான் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் அணியை வழிநடத்தி வந்த டெஸ்சம்ஸுக்கு பதிலாக சிடான் பயிற்றுநர் பொறுப்பை ஏற்றுள்ளார். 

நடந்து முடிந்த 2026 FIFA உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸ் அணி நான்காவது இடத்தை பிடித்தது. 

சினெடின் சிடான் கடந்த 1998ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி FIFA உலகக் கிண்ணத்தை வெல்வதில் முக்கிய ஆட்டக்காரராக விளங்கினார். 

பிரான்ஸ் 1998, 2018 FIFA உலகக் கிண்ணத்தை வென்றது. 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த உலக கிண்ண போட்டியில் இறுதியாட்டம் வரை சென்ற பிரான்ஸ் அணி அர்ஜெண்டினா அணியிடம் தோல்வி அடைந்தது. 

ரியால் மெட்ரிட் அணியின் நிர்வாகியாக இருந்த சினெடின் சிடான் 2016,2017 மற்றும் 2018ஆம் ஆண்டு ரியால் மெட்ரிட் UEFA சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்ல உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset