நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசியாவின் ஐந்து தங்கப்பதக்க இலக்கை லத்தீப் நிறைவு செய்தார்

கிளாஸ்கோ:

கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் டி20 நீளம் தாண்டுதல் போட்டியில், தேசிய தடகள சாம்பியனான டத்தோ அப்துல் லத்தீப் ரோம்லி முதலிடம் பிடித்தார்.

இதன் மூலம் அவர்  மலேசிய அணிக்கு அதன் ஐந்தாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

ஸ்காட்ஸ்டவுன் அரங்கத்தில் போட்டி முழுவதும் கனமழை பெய்தபோதிலும், 29 வயதான இந்த வீரர் தனது மூன்றாவது முயற்சியில் 7.17 மீட்டர் தாண்டி தனது மேன்மையை நிரூபித்தார்.

கடந்த ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் அவர் நிகழ்த்திய 7.67 மீட்டர் என்ற அவரது தனிப்பட்ட சிறந்த சாதனை, இந்தப் போட்டிக்கான உலக சாதனையாகவும் உள்ளது.

கனடா வீரர் நோவா வுசிக்ஸ் 6.66 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு தேசியப் பிரதிநிதியான எல்ஜோ கோட்டுவோ 6.51 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்று பதக்க மேடையை நிறைவு செய்தார்.

60 கிலோ கிராம் பிரிவில் முகமது அனிக் காஸ்தான், 65 கிலோ பிரிவில் முகமது அஸ்னில் பிதின், 79 கிலோ பிரிவில் முகமது எர்ரி ஹிடாயத், 88 கிலோ பிரிவில் முகமது ஹஃபிசுதீன் ரோஸ்லின் ஆகியோர் மூலம் எடை தூக்கும் வீரர்கள் ஏற்கனவே நான்கு தங்கப் பதக்கங்களை வென்றிருந்த நிலையில், 

லத்தீப்பின் இந்த வெற்றியானது தேசிய அணியின் ஐந்து தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கை நிறைவு செய்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset