நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு: லாபு வேட்பாளருக்கு எதிராக போலிஸ் விசாரணை 

பெட்டாலிங் ஜெயா: 

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் லாபு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு எதிராக போலிஸ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது 

கடந்த செவ்வாய்கிழமை, இந்த விவகாரம் குறித்து 72 வயதுடைய ஆடவர் ஒருவர் போலிஸ் புகார் செய்தார் என்று நெகிரி செம்பிலான் மாநில போலிஸ் தலைவர் அல்சஃப்னி அஹ்மத் கூறினார். 

வாட்ஸ்ஆப் செயலி மூலமாக வைரலான காணொலியைத் தொடர்ந்து அவர் இந்த போலிஸ் புகாரை மேற்கொண்டதாக அல்சஃப்னி விளக்கினார். 

இந்த குற்றச்சாட்டு 1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் செக்‌ஷன் 11இன் கீழ் விசாரணை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

ஜூலை 18 முதல் நேற்று வரை, தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக 80 காவல் துறை புகார்கள் பெறப்பட்டதாகவும், 23 விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset