செய்திகள் மலேசியா
இரு மாணவிகளைக் கொலை செய்த சம்பவம்: வாகன ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
தெலுக் இந்தான் -
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு மாணவிகளைக் கொலை செய்தது உட்பட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள வாகன ஓட்டுநர் ஒருவர் இன்று இங்குள்ள தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
இரு குற்றங்கள் யாவும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் மற்ற இரு குற்றங்களும் 1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி நய்டாத்துள் அதிரா அஸ்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட 28 வயதான அலெக்ஸ் ரொபெர்ட் தனக்கு புரிந்ததாக தலையை மட்டும் அசைத்தார்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி மாலை 6.35 மணிக்கு நூர் Nur Dania Arissa Salim மற்றும் Nur Atikah Abdullah இருவரையும் கொலை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது
இந்த வழக்கு உயர்நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டதால் எந்தவொரு ஒப்புதல் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை
மற்றொரு குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டவர் போதையில் வாகனத்தை செலுத்தி பாதசாரி ஒருவரை காயம் விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் தேதியாக செப்டம்பர் 11-ஐ நீதிமன்றம் நிர்ணயித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2026, 8:58 pm
மடானி அரசின் திட்டங்களால் இந்திய சமூகம் தொடர்ந்து பயனடைந்து வருகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
July 30, 2026, 5:49 pm
இளம் பெண் உயிர்களை பறித்த விபத்து: ஓட்டுநர் மீது கொலை வழக்கு பாய்ந்தது
July 30, 2026, 5:13 pm
ஜொகூர் பாருவில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன
July 30, 2026, 5:12 pm
விளையாட்டு எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது: பெர்லிஸ் மாநில ஆட்சியாளர் தகவல்
July 30, 2026, 4:43 pm
