செய்திகள் மலேசியா
சபா, சரவாக் மாநிலங்களில் புதிய கடவுச்சீட்டு வழங்கும் பணி தொடங்கியது
கோத்தகின்னபாலு:
குடியேற்றத் துறை, சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் புதிய சர்வதேச கடவுச்சீட்டைப் படிப்படியாக வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. இது நாடு தழுவிய அமலாக்கத்தின் அடுத்த கட்டமாகும்.
இரு மாநிலங்களில் உள்ள கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகங்கள் இந்தத் திட்டத்தை இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தும் என்றும், 6-ஆம் கட்டம் இன்று தொடங்கும் என்றும், 7-ஆம் கட்டம் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கும் என்றும் அந்தத் துறை தெரிவித்துள்ளது.
“6-ஆம் கட்டத்தின் கீழ் பிந்துலு, ஸ்ரீ அமான், கூச்சிங், மிரி, சிபு, கோத்த கினபாலு, தாவாவ், கெனிங்காவு நகர்ப்புற மாற்ற மையம் ஆகிய அலுவலகங்கள் அடங்கும்.
“7-ஆம் கட்டம் கூச்சிங், லாவாஸ், லிம்பாங், கோத்த கினபாலு, சண்டக்கான், கோட்டா கினபாலு சர்வதேச விமான நிலையம், லஹாட் டத்து, லபுவான் நகர்ப்புற மாற்ற மையம் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களை உள்ளடக்கும்,” என்று அது இன்று ஒரு முகநூல் பதிவில் கூறியுள்ளது.
பட்டியலிடப்பட்ட அலுவலகங்கள் மட்டுமே குறிப்பிட்ட தேதிகளில் புதிய கடவுச்சீட்டை வழங்கத் தொடங்கும் என்று அந்தத் துறை கூறியுள்ளது.
புதிய கடவுச்சீட்டு சேவையை வழங்கும் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன், பங்கேற்கும் அலுவலகங்களின் பட்டியலைச் சரிபார்த்து, தங்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் அல்லது புதுப்பித்தல்களைத் திட்டமிடுமாறு அது பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
“தற்போதுள்ள கடவுச்சீட்டுகள் அவற்றின் காலாவதி தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை செல்லுபடியாகும் என்பதால் அவசரப்படத் தேவையில்லை,” என்று அது கூறியுள்ளது.
ஜூன் 30 அன்று. பிரதமர் அன்வர் இப்ராஹிம் புதிய மலேசிய கடவுச்சீட்டைத் தொடங்கி வைத்தார்.
மேம்படுத்தப்பட்ட ஆவணத்தில் 94 பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2026, 8:58 pm
மடானி அரசின் திட்டங்களால் இந்திய சமூகம் தொடர்ந்து பயனடைந்து வருகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
July 30, 2026, 5:49 pm
இளம் பெண் உயிர்களை பறித்த விபத்து: ஓட்டுநர் மீது கொலை வழக்கு பாய்ந்தது
July 30, 2026, 5:17 pm
இரு மாணவிகளைக் கொலை செய்த சம்பவம்: வாகன ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
July 30, 2026, 5:13 pm
ஜொகூர் பாருவில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன
July 30, 2026, 5:12 pm
