செய்திகள் மலேசியா
தோமி தாமஸுக்கு எதிரான வழக்கை மீண்டும் தொடரக் கோரிய நஜிப்பின் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது
புத்ராஜெயா:
நாட்டின் முன்னாள் தேசிய சட்டத்துறை தலைவர் தோமி தாமஸுக்கு எதிராக 1.9 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடுத்த வழக்கை மீண்டும் தொடர அனுமதி கோரி செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இன்று கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைத்தது
கூட்டரசு நீதிமன்றம் 2-1 என்ற பெரும்பாண்மை தீர்ப்பின் மூலம் இந்த வழக்கை ஒத்திவைக்கும் முடிவை எடுத்தது.
நீதிபதிகளான அபு பக்கர் ஜெய்ஸ் மற்றும் நீதிபதி அஸ்மி அரிஃபின் ஆகியோர் முன்னாள் பிரதமரின் ஒத்திவைப்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், நீதிபதி அஸிமா ஓமர் அதை ஏற்க மறுத்து, அந்த விண்ணப்பம் அசல் கால அட்டவணைப்படி தொடர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் முடிவை உறுதிசெய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, நஜிப் கடந்த மார்ச் மாதம் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.
73 வயதான முன்னாள் பிரதமர், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி மூன்று சட்டரீதியான கேள்விகளை எழுப்பினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2026, 8:58 pm
மடானி அரசின் திட்டங்களால் இந்திய சமூகம் தொடர்ந்து பயனடைந்து வருகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
July 30, 2026, 5:49 pm
இளம் பெண் உயிர்களை பறித்த விபத்து: ஓட்டுநர் மீது கொலை வழக்கு பாய்ந்தது
July 30, 2026, 5:17 pm
இரு மாணவிகளைக் கொலை செய்த சம்பவம்: வாகன ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
July 30, 2026, 5:13 pm
ஜொகூர் பாருவில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன
July 30, 2026, 5:12 pm
விளையாட்டு எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது: பெர்லிஸ் மாநில ஆட்சியாளர் தகவல்
July 30, 2026, 4:43 pm
